Friday, April 9, 2010

பிரமிடுகள் - ஒரு புரியாத புதிர்

பிரமிடுகள் - பிரபஞ்ச ரகசியங்களின் கோப்பு * இவை உலகின் கண்டங்களையும் கடல்களையும் சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன் என்ற கோட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. *26,00,000 பாறைகள் இதனை கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. * இதன் ஆரங்கள் மென்மையாகத் தேய்த்து துளியும் சந்து இல்லாமல் பொருத்தியிருக்கிறார்கள்.

செவ்வாய்க் கோளில் பிரமிடுகள் :

சோவியத் யூனியன் : Marriner - 9 Viking - 1
விஞ்ஞானிகள் எபிஸியம் மேட்டுப்பகுதி என்று குறிக்கும் பகுதியில் பல பிரமிடுகள் போன்ற அமைப்புகள் காணப்படுகிறதாம். சிறந்த கட்டுமான அடிப்படையில் அவை அமைந்திருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எகிப்து நாட்டில் பிரமிடுகளுக்கு அருகில் ஸ்பிங்க்ஸ் என்ற ஒரு பெண் தேவதையின் உருவச்சிலை உண்டு. அந்த உருவச்சிலை பெண்ணின் தலையையும், சிங்கத்தின் உடலையும் கொண்டதாக இருக்கின்றது.

இதே போன்ற ஓர் உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாக சோவியத் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

செவ்வாய்க் கோளில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் அமைப்புகள் ஒரு நாகரிக முன்னேற்றமடைந்த சமூகத்தினால் கட்டப்பட்டவையாக இருக்கலாம் என்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

முடிவு : பிரமிடுகள் தானாக உருவானவை அல்ல. யாராலோ உருவாக்கப்பட்டவை.

செவ்வாய்க் கோளில் காணப்படும் சிறிய பிரமிடுகள் எகிப்தில் கிஸா பகுதியில் உள்ள பெரிய பிரமிடுகளையும், பெர்முடா தீவுகளின் அடியில் உள்ள கடலுக்கு அடியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமிடுகளையும், பிரேசில் நாட்டுக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமிடுகளையும் உருவத்தில் சுத்திருக்கின்றன.

செவ்வாய்க்கிரகத்தில் காணப்படும் பிரமிடுகள் ஏறத்தால 1. கி.மீ நீள அகலமும் அதன் கோபுர உயரம் ஒரு கி. மீ - கவும் உள்ளது. அந்த பிரமிடுகள் செவ்வாய்க் கோளில் 25 ச. கி. மீ பிரதேசத்திற்குள் அமைந்திருக்கின்றன. அவற்றின் நிழல்கள் தெளிவாகவும் ஒழுங்காகவும் உள்ளன. நகரங்களில் கட்டிடங்களால் ஏற்படும் நிழல்களை அவற்றின் நிழல்கள் ஒத்திருக்கின்றன. நமது பூமியில் செவ்வாய்க் கோளில் உள்ளது போன்ற அவ்வளவு பிரம்மாண்டமான கட்டிடம் எதுவும் கிடையாது.

கிஸா பிரமிட் தொகுதியில் உள்ள சியோப்ஸ் எல்லாவற்றையும், விடப் பெரியது. கி. மு. 26 - ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1953 - ல் அதை ஆராயத் தொடங்கிய பிரெஞ்சு விஞ்ஞானி அது ஒரு சூரியக்கடிகாரம் என்பதைக் கண்டார். பிரமிட்டின் அளவும், உருவமும், நாள், மணி, பருவம் ஆகியவற்றைக் கணக்கிட உதவும் வகையில் அமைந்திருப்பது தெரியவந்தது. மையப்பகுதிக்குச் செல்லும் படிக்கட்டுகள் துருவ நட்சத்திரத்தைக் காணும் வகையில் சரியாக 26 டிகிரி 17 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரமிட்கள் கல்லறையாக மட்டுமின்றி வானியல் ஆய்வுக் கூடமாகவும் பயன்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தில் சாலிஸ்பரி சமவெளியில் பிரமாண்டமான கற்பாளங்கள் வட்ட வடிவில் நடப்பட்டுள்ளன. கி. மு. 1900 - ல் உருவானது இது என்று கருதப்படுகிறது. சூரியனுக்குக் கட்டப்பட்ட கோயில் என்று அண்மைக் காலம் வரை நம்பப்பட்டது. ஒவ்வொன்றும் 14 டன் எடையுள்ள 60 கற்பாளங்கலாக வட்டமாக உள்ளன. 1963 -ல் அமெரிக்க விஞ்ஞானி ஹாக்கின்ஸ் அது கோயில் அல்ல ஆராய்ச்சிக் கூடம் என்பதைக் கண்டு அறிந்தார். சூரிய உதயம், அஸ்தமனம் பற்றித் துல்லியமாகக் கணக்கிடவும், சந்திரனுடைய இயக்கம் சூரிய சந்திர கிரணங்களை அறியவும் அமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் என்று அவர் கூறினார். அதன் அமைப்பு பற்றி கம்ப்யூட்டர் மூலம் சோதித்துப் பார்த்ததில் அவர் கூறியது சரி என்று தெரியவந்தது.

0 comments:

Post a Comment